Latestமலேசியா

நெகிரி செம்பிலானில் 3 வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில்; 5 பேர் மரணம்

கோலாலம்பூர், பிப் 13 – ஜெம்போலுக்கு (Jempol) அருகே Jalan Bahau – Rompin 6 ஆவது கிலோமீட்டரில் நேற்றிரவு சுமார் 9 மணியளவில் மூன்று வாகனங்கள் சம்சப்தப்பட்ட விபத்தில் ஐவர் மரணம் அடைந்தனர்.

ரொம்பினிலிருந்து பாஹாவை நோக்கி 31 வயதுடைய ஆடவர் இதர மூன்று பயணிகளுடன் Perodua Axia காரை ஓட்டிச் சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டதாக ஜெம்போல் மாவட்ட போலீஸ் தலைவர் Hoo Chang Hook தெரிவித்தார்.

சம்பவம் நடந்த இடத்தில் Toyota Mark x காரை ஓட்டிச் சென்ற 51 வயதுடைய ஆடவர் எதிரேயுள்ள சாலையில் நுழைந்ததில் புரோடுவா அக்சியாவுடன் மோதி சுழன்றது .

அப்போது 43 வயதுடைய ஆடவர் ஓட்டிவந்த Ford Ranger நான்கு சக்கர வாகனம் புரோடுவா அக்சியாவின் பின்னால் மோதியது.

அந்த விபத்தில் புரோடுவா Axia ஓட்டுனரும் அதிலிருந்த 18 மற்றும் 19 வயதுடைய இரண்டு பயணிளும் மற்றும் தலை மற்றும் காலில் காயத்திற்குள்ளான Toyota Mark X ஓட்டுனரும் விபத்து நிகழ்ந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.

Perodua Axia காரில் அமர்ந்திருந்த 16 வயது பயணி ஒருவர் கோலாப்பிலா (Kuala Pilah) மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது இறந்ததாக Hoo Chang Hook தெரிவித்தார். இந்த விபத்தில் Ford Ranger வாகனத்தின் ஓடடுனர் காயம் அடையவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!