
கோலாலம்பூர், ஜனவரி-24, கட்டுப்பாட்டை இழந்து நெடுஞ்சாலையில் கவிழ்ந்த ஒரு லாரி, அதிசயமாக தன்னைத்தானே சரிசெய்துகொண்டு அசல் நிலைக்குத் திரும்பிய வீடியோ வைரலாகி, வலைத்தளவாசிகளை திகைக்க வைத்துள்ளது.
பின்னால் வந்த காரின் dashcam கேமராவில் பதிவான இந்த ‘அரிதான’ காட்சி, Fadzie என்ற டிக் டோக் பயனரால் பதிவேற்றப்பட்டுள்ளது.
முன்னால் இருந்த வாகனத்தைத் தவிர்க்க லாரி வளைந்து சென்றதால் அது கவிழ்வதை வீடியோவில் காண முடிகிறது.
லாரி கவிழ்ந்ததை கண்ட மற்ற ஓட்டுநர்கள் விபத்தைத் தவிர்த்த வேளை, அருகிலிருந்த மற்றொரு கார் சுதாகரித்துக் கொண்டு வேகத்தைக் குறைத்தது.
ஆனால் கவிழ்ந்த லாரி, மீண்டும் நிலைப்பெற்று அசல் நிலைக்குத் திரும்புமென யாரும் எதிர்பார்க்கவில்லை.
இதுவோர் அதிசயம் எனக் குறிப்பிட்ட பெரும்பாலான வலைத்தளவாசிகள், தங்கள் கண்களையே நம்ப முடியவில்லை எனக் கூறினர்.
எதிர்பார்த்தபடியே பல்வேறு நகைச்சுவையான கருத்துகளைப் பதிவிட்டும், லாரி ஓட்டுநரின் அசாத்தியத் திறமையை அவர்கள் பாராட்டியும் வருகின்றனர்.
அவ்வீடியோவுக்கு இதுவரை 3 லட்சத்திற்கும் மேற்பட்ட views-களும் கிட்டத்தட்ட 12 ஆயிரம் likes-களும் சுமார் 1,000 கருத்துகளும் கிடைத்துள்ளன.