Latestமலேசியா

பணி நிரந்தரமாக்கலை நிராகரித்த 400-க்கும் மேற்பட்ட மருத்துவ அதிகாரிகள்; இடப் பிரச்னை முதல் எதிர்காலம் குறித்த கவலை வரைக் காரணம்

கோலாலம்பூர் – ஆகஸ்ட்-1 – 2023 முதல் 2025 வரை 414 ஒப்பந்த மருத்துவ அதிகாரிகள், நிரந்தரப் பணி வாய்ப்பை நிராகரித்து விட்டு பதவி விலகியுள்ளனர்.

சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ Dr சுல்கிஃப்ளி அஹ்மாட் அதனைத் தெரிவித்துள்ளார். அவ்வெண்ணிக்கையானது, அக்காலக்கட்டத்தில் நிரந்தரப் பணி வாய்ப்பு வழங்கப்பட்ட 11,901 மருத்துவ அதிகாரிகளில் 3.5 விழுக்காடாகும்.

அவர்களின் அம்முடிவுக்கு, சபா, சரவாக் மற்றும் லாபுவானில் வேலை செய்யத் தயாராக இல்லை, நகர மருத்துவமனைகளில் பணியாற்றவே அதிகம் விரும்புவது, கிராமப்புற அல்லது தொலைதூரப் பகுதிகளுக்கு பணியமர்த்தப்பட்டால் நிபுணத்துவத் துறைகளில் தொழில் முன்னேற்றம் இருக்காது என்ற கவலைகள் போன்றவை முதன்மைக் காரணங்களாக உள்ளன.

இது தவிர, குடும்பப் பராமரிப்புப் பொறுப்புகள், சுகாதாரப் பிரச்னைகள், இடப் பிரச்னை மற்றும் நிதி கவலைகள் போன்ற தனிப்பட்ட காரணங்களும் தெரிவிக்கப்பட்டன.

மக்களவைக்கு எழுத்துப்பூர்வமாக வழங்கிய பதிலில் Dr சுல்கிஃப்ளி அதனைத் தெரிவித்தார்.

இந்நிலையில், சம்பள உயர்வு, நிரந்தரப் பணி வாய்ப்பு, பதவி உயர்வு போன்ற பல்வேறு நடவடிக்கைகள் வாயிலாக, மருத்துவ அதிகாரிகளைத் தக்க வைத்துக் கொள்ளும் அரசாங்கத்தின் கடப்பாட்டை அவர் மறு உறுதிச் செய்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!