Latestமலேசியா

பத்து பஹாட் கடற்கரையில் தீப்பற்றி எரிந்தக் கார்; 72 வயது முதியவர் உடல் கருகி மரணம்

பத்து பஹாட், செப்டம்பர்-25,

ஜோகூர், பத்து பஹாட் செங்காராங் எனுமிடத்தில் எரிந்த கார் ஒன்றை அணைக்கும் நடவடிக்கையில் ஈடிபட்டிருந்த தீயணைப்பு-மீட்புத் துறையினர், ஓட்டுனர் இருக்கையில் 72 வயது உள்ளூர் ஆடவரின் எரிந்த உடலை மீட்டனர்.

Pantai Sungai Lurus கடற்கரையோரமாக தனியே நின்றிருந்த அக்கார் தீப்பற்றி எரிவதாக அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது.

எனினும், மிகவும் குறுகலான பாதை காரணமாக தீயணைப்பு வண்டியால் சம்பவ இடத்திற்குச் செல்ல முடியவில்லை..

இதனால் பொது மக்களின் மோட்டார் சைக்கிள்களைப் பயன்படுத்தி அங்குச் சென்று, அருகிலிருந்த ஆற்றிலிருந்து தண்ணீரை வாளிகளில் எடுத்து தீயை அணைக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.

இறந்தவரின் அடையாளத்தை உறுதிப்படுத்த DNA பரிசோதனை செய்யப்படும் என மாவட்ட போலீஸ் கூறியது.

தற்போதைக்கு இச்சம்பவம் திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

பொது மக்களிடம் சம்பவம் குறித்த தகவல் இருந்தால், செங்காராங் போலீஸ் நிலையத்தை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!