
புத்ரா ஜெயா, ஆகஸ்ட்-15- நாட்டில் ஏற்பட்டுள்ள பல பரபரப்பான விவகாரங்களைத் தொடர்ந்து , பொது ஒழுங்கு மற்றும் பாதுகாப்பிற்கு வேண்டுமென்றே அச்சுறுத்தும் சினம் ஏற்படுத்துவோர் மற்றும் பிரச்னைகளை தூண்டக்கூடியோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் அன்வார் இப்ராஹிம் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
தேசியக் கொடியை தலைகீழாக ஏற்றியதாலும், படிவம் 1 மாணவி Zara Qairina Mahathirரின் மரணத்தாலும் ஏற்பட்ட சர்ச்சைகளைக் குறிப்பிட்ட அன்வார், இனி எந்த எச்சரிக்கையோ அல்லது கண்டனமோ இருக்காது என்றார்.
நாடு குழப்பத்திற்கு உள்ளாகுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
Zara வின் மரணம் மற்றும் Jalur Gemilang சர்ச்சையின் மீது சவாரி செய்து, சிலர் கோபத்தை அதிகரிக்கப் பார்க்கிறார்கள்.
அதனால்தான், ஆத்திரமூட்டுபவர்கள் முக்கிய பிரமுகர்கள், அரசியல்வாதிகள் அல்லது பொதுமக்கள் என எதுவாக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு தாம் அறிவுறுத்தியிருப்பதாகவும் இதன் பிறகு எந்த எச்சரிக்கையும் இருக்காது என அவர் தெரிவித்தார்.
இன்று பிற்பகலில் புத்ர ஜெயாவில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு பேசியபோது அவர் இதனை தெரிவித்தார்.