
இஸ்லாமாபாத், ஆகஸ்ட்-16 – பாகிஸ்தானில் பெருவெள்ளத்திற்கு இதுவரை 227 பேர் பலியாகியுள்ள நிலையில், மீட்புப் பணிக்குச் சென்ற ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி ஐவர் உயிரிழந்தனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற அந்த Mi-17 ஹெலிகாப்டர், மோசமான வானிலையால் விழுந்து நொறுங்கியது.
அடைமழையைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தில் Khyber Pakhtunkhwa மாகாணத்தில் மட்டுமே இதுவரை 206 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும் ஏராளமானோரைக் காணவில்லை என அந்நாட்டு பேரிடர் மேலாண்மை வாரியம் கூறியது.
வெள்ளிக்கிழமை தொடங்கி செப்டம்பர் 10 வரை இன்னோர் அடைமழைக் காலத்தை வடமேற்கு மாகாணங்கள் எதிர்கொள்ள வேண்டுமென்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.