Latestமலேசியா

பாடகர் கோல்ட் தேவராஜ் பங்கேற்கும் சைவக் கல்விக்கான நிதி திரட்டும் இசை நிகழ்ச்சி; பிப் 17 பிரிக்பீல்ட்ஸில்

பாடகர் கோல்ட் தேவராஜ் பங்கேற்கும் சைவக் கல்விக்கான நிதி திரட்டும் இசை நிகழ்ச்சி; பிப் 17 பிரிக்பீல்ட்ஸில்

கோலாலம்பூர், பிப்ரவரி 13 –

சைவ தத்துவம் மற்றும் அறக்கட்டளையான Yayasan Falsafah dan Institusi Saiva அமைப்பு, சைவ சமயக் கல்வி மற்றும் ஆன்மீக வளர்ச்சியை முன்னெடுக்கும் உயர்ந்த நோக்கத்துடன் “திருலயா 2026” எனும் சிறப்பு நிதி திரட்டும் பக்தி இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்ச்சி வருகின்ற பிப்ரவரி 17 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு பிரிக்‌ஃபீல்ட்ஸில் அமைந்துள்ள Temple of Fine Arts அரங்கில் நடைபெறுகிறது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற பக்திப் பாடகர் திரு. கோல்ட் தேவராஜ் இந்நிகழ்ச்சியில் சிறப்பு கலைநிகழ்ச்சியை வழங்கவிருக்கின்றார்.“ஓடி ஓடி” உள்ளிட்ட ஆன்மீகப் பாடல்களால் பரவலாக அறியப்படும் அவர், பக்தி உணர்வை நவீன இசை வடிவத்துடன் இணைத்து ரசிகர்களை கவர்ந்துவரும் கலைஞராகப் போற்றப்படுகிறார்.

இந்த நிதி திரட்டும் முயற்சி, ஹுலு சிலாங்கூரின் கெர்லிங் பகுதியில் உருவாக்கப்படவுள்ள மலேசியாவின் முதல் சைவ முன்மாதிரி ஆலயம் மற்றும் சைவக் கல்லூரி திட்டத்திற்காக நடத்தப்படுகிறது. சைவ தத்துவம் மற்றும் இந்து சமயக் கல்வியில் தகுதியான ஆசான்களை உருவாக்கி, எதிர்கால தலைமுறைக்கு வலுவான சமய அடித்தளத்தை அமைப்பதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும். கட்டிடப் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளதாகவும் அமைப்பு தெரிவித்துள்ளது.

திருலயா 2026 நிகழ்ச்சிக்கான VVIP டிக்கெட்டுகள் 1,000 ரிங்கிட் எனவும், VIP டிக்கெட்டுகள் 500 ரிங்கிட் எனவும் மற்றும் பொது நுழைவு டிக்கெட்டுகள் 200 ரிங்கிட் எனவும் கூறப்படுகின்றது. VVIP டிக்கெட்டில் கலைஞருடன் நேரடி சந்திப்பு மற்றும் புகைப்பட வாய்ப்பும் அடங்குவதோடு டிக்கெட்டுகளை இணையம் மூலம் பெற்று கொள்ளலாம்.

மேலும், நேரடி முன்பதிவிற்காக Yayasan Falsafah dan Institusi Saiva-வின் வங்கி கணக்கிற்கு பணம் செலுத்தி, மேல் விபரங்களை புலனத்தின் வாயிலாக அனுப்பலாம்.

சைவ மரபையும் இந்து சமயக் கல்வியையும் நிலைநிறுத்தி வளர்க்கும் நோக்கில் நடைபெறும் இந்நிகழ்ச்சி, சமய மற்றும் கல்வி வளர்ச்சியில் முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!