Latestமலேசியா

பாலிங்கில் கார் பள்ளத்தில் விழுந்ததில் ஆசிரியர் பலி

பாலிங்: நேற்று, பாலிங் கம்போங் தெலுக் சுங்கை டுரியான் பகுதியில் பயணித்து கொண்டிருந்த கார் ஒன்று, சாலையை விட்டு விலகி அருகிலுள்ள பள்ளத்தில் விழுந்ததில் 44 வயது மதிக்கத்தக்க சைஃபுல் யாசான் ஹசன் (Saiful Yazan Hasan) என்ற பள்ளி ஆசிரியர் காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அந்த ஆசிரியர் கம்போங் பாங்கோல் லெபானிலுள்ள அவரது தாயின் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது அச்சம்பவம் நடந்ததாகவும், விபத்து நடந்த இடம் அவரது வீட்டிலிருந்து வெகு தொலைவில் இல்லை என்றும் பாதிக்கப்பட்டவரின் சகோதரர் கூறியுள்ளார்.

குவாலா கெத்திலிலுள்ள மக்தாப் மாமுட்டில் (Maktab Mahmud Kuala Ketil) பயிற்றுவிக்கும் அந்நபர், ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் தனது தாயாரைக் காண இங்கு வந்து போவது வழக்கம் என்பது அறியப்படுகின்றது.

இதற்கிடையில், தகவல் கிடைத்தவுடனேயே சம்பவ இடத்திற்கு விரைந்த பாலிங் தீயணைப்பு குழுவினர் சுமார் 10 நிமிடங்களில் காரினுள் இருந்தவரை மீட்டெடுத்துள்ளனர் என்று மீட்பு நிலையத் தலைவர் சுல்கைரி மாட் தன்ஜில் ( Zulkhairi Mat Tanjil ) தெரிவித்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!