Latestமலேசியா

பாலியல் தொந்தரவு: வைரல் வீடியோவில் காணப்பட்ட நபரை போலீஸ் தேடுகிறது

காஜாங், ஏப்ரல்-3-பாலியல் தொந்தரவு தொடர்பில் சமூக ஊடகங்களில் வைரலான ஒரு வீடியோவில் காணப்படும் ஆடவரை, போலீஸார் தேடி வருகின்றனர்.

Threads சமூக ஊடகத்தில் பதிவேற்றப்பட்ட அவ்வீடியோ, காஜாங் MRT நிலையத்தின் Gate A நுழைவாயிலில் பதிவுச் செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது.

வீடியோவைப் பதிவேற்றியப் பெண் தான் இதில் பாதிக்கப்பட்டவராவார்.

வீடியோவில் சிவப்புச் சட்டையில் தள்ளாடி நடந்துச் செல்லும் ஆடவர், முன்னதாக அப்பெண் படிகட்டில் அமர்ந்திருந்தபோது அவரின் பின்பகுதியை தடவியதாகக் கூறப்படுகிறது.

இச்சம்பவம் தமக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாகவும், அவ்வழியாகச் செல்லும் பெண்கள் கவனமாக இருக்குமாறும் அப்பெண் கேட்டுக் கொண்டார்.

இந்த வீடியோ, பெண்களின் பாதுகாப்பு குறித்து பொது மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், காஜாங் போலீஸ் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளது.

சம்பவம் குறித்து தகவல் தெரிந்தோர் உடனடியாக போலீஸாரை தொடர்புகொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!