
பாலேக் பூலாவ், ஜூலை-23- பினாங்கு, பாலேக் பூலாவில் ஈராண்டுகளாக சொந்த மகளையே பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கி வந்த சந்தேகத்தில், 52 வயது தந்தை கைதாகியுள்ளார்.
அப்பெண் பிள்ளை 13 வயதாக இருக்கும் போது முதன் முறையாக அக்கொடுமைக்கு ஆளானது; இப்போது 15 வயதிலும் அது தொடருகிறது.
ஆகக் கடைசியாக கடந்த ஜூலை 8-ஆம் தேதி வீட்டில் வைத்தே தந்தை அக்கொடுமையைப் புரிந்துள்ளார்.
பள்ளிக்குப் போவதற்கு முன் கைச்செலவுக்கு பணம் கொடுப்பதாகக் கூறி மகளைப் படுக்கையறைக்கு அழைத்து, பாலியல் சீண்டல் செய்துள்ளார்.
இது போதாதென்று, 22 வயது சொந்த அண்ணனே தங்கையை கற்பழித்த கொடூரமும் நிகழ்ந்துள்ளது.
வீட்டில் யாரும் இல்லாத போது, தந்தையும் மகனும் இந்த அவமானகரச் செயலில் ஈடுபட்டுள்ளது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் மேல் பரிசோதனைக்காக பினாங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குற்றவியல் சட்டம் மற்றும் 2017 சிறார் பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் தந்தையும் மகனும் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுகின்றனர்.