Latest
பி.கே.ஆர் உதவித் தலைவர் ரமணனுக்கு ‘ரிஃபோர்மாசி’ முழக்கத்துடன் சபாவில் உற்சாக வரவேற்பு

கோத்தா கினாபாலு, நவம்பர்-9,
2-நாள் பயணமாக சபா சென்றுள்ள பி.கே.ஆர் உதவித் தலைவர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணனுக்கு கட்சித் தொண்டர்கள் மீண்டும் படு உற்சாகமாக வரவேற்பு வழங்கினர்.
கோத்தா கினாபாலு அனைத்துலக விமான நிலையத்தில் இன்று மதியம் வந்திறங்கியவரை, ‘ரிஃபோர்மாசி’ முழக்கத்துடன் அவர்கள் வரவேற்றனர்.
அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்வதிலும் ஏராளமானோர் ஆர்வம் காட்டினர்.
தொழில்முனைவோர் – கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணையமைச்சருமான ரமணன், சபாவுக்கு ஒரு வாரத்தில் மேற்கொள்ளும் இரண்டாவது பயணம் இதுவாகும்.
நவம்பர் கடைசியில் நடைபெறவுள்ள மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான கட்சியின் தயார் நிலை குறித்து கண்டறியும் அதே வேளை, தமதமைச்சின் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகள் சிவற்றிலும் ரமணன் பங்கேற்கிறார்.



