Latestமலேசியா

பினாங்கில் பட்டாசு தகராறு; வாக்குவாதம் வன்முறையில் முடிந்தது

ஜோர்ஜ்டவுன், மார்ச்-19-பினாங்கு, ஆயர் ஈத்தாமில் பட்டாசு வெடித்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதல் சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கம்போங் மெலாயு பகுதியில் நடந்த இச்சம்பவம், சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.

2 கும்பல்கள் இடையே வாக்குவாதம் முற்றியதை, அந்த 2 நிமிட வீடியோவில் காணமுடிகிறது.

இரவு நேரத்தில் வீடுகளுக்கு அருகில் பட்டாசு வெடித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறே இந்த மோதலுக்குக் காரணமாக இருக்கலாம் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

பொது அமைதியை சீர்குலைக்க முயன்ற குற்றச்சாட்டின் கீழ் இச்சம்பவம் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இதுவரை யாரும் கைதுச் செய்யப்படவில்லை.

விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!