Latestமலேசியா

பினாங்கில் யார் தலைமையேற்பது என்பதை PN தலைமையே முடிவுச் செய்யும்; சஞ்சீவன் அறிக்கை

கோலாலம்பூர், ஜனவரி-27, பினாங்கு மாநிலத்தைக் கைப்பற்றும் பெரிக்காத்தான் நேஷனல் முயற்சிக்கு யார் தலைமையேற்பது என்பதை, கூட்டணியின் தலைமை தான் முடிவுச் செய்யும்.

பெர்சாத்து கட்சியின் மலாய்க்காரர் அல்லாத உறுப்பினர்களுக்கான பெர்செக்குத்து பிரிவின் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ ஆர். ஸ்ரீ சஞ்சீவன் அவ்வாறு கூறினார்.

பினாங்கைக் கைப்பற்றும் முயற்சிக்கு பெரிக்காத்தான் உறுப்புக் கட்சியான MIPP எனப்படும் மலேசிய இந்திய மக்கள் கட்சித் தலைமையேற்கத் தயார் என செய்தி வெளியாகியுள்ளது.

அவ்வாறு MIPP தலைவர் பி.புனிதன் கூறியது ஒரு பரிந்துரை மட்டுமே; ஆக அவர் கூறியதை வைத்து MIPP தான் அம்முயற்சிக்குத் தலைமையேற்கும் என இப்போதே கூறி விட முடியாது.

இது பெரிக்காத்தான் தலைவர்கள் மன்றத்தில் விவாதித்து எடுக்கப்பட வேண்டிய முடிவாகும் என, சஞ்சீவன் சுட்டிக் காட்டினார்.

அடுத்த சட்டமன்றத் தேர்தலில் பினாங்கைக் கைப்பற்ற, மலாய்க்காரர்-இந்தியர் தேர்தல் உடன்பாடு செய்து கொள்ள முயற்சிகள் நடைபெறுவதாக முன்னதாக செய்திகள் வெளியாகின;

சீனர்களின் வாக்குகளைக் கொண்டு வருவதில் கெராக்கான் தோல்வி கண்டிருப்பதால், இந்தியர்களுடன் கூட்டணி வைக்க பெரிக்காத்தான், குறிப்பாக பாஸ் கட்சி முனைப்புக் காட்டுவதாகக் கூறப்பட்டது.

அது குறித்தே புனிதன் முன்னதாக அறிக்கை வெளியிட்டிருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!