
ஜோர்ஜ்டவுன், ஆகஸ்ட்-11 – பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவராக ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர் மேலும் ஓராண்டுக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஆகஸ்ட் 1 முதல் இது நடப்பு வருவதாக, அறிக்கை வாயிலாக அவ்வாரியம் அறிவித்துள்ளது.
துணைத் தலைவராக செனட்டர் Dr லிங்கேஷ்வரன் ஆர் அருணச்சலமும் அதே ஓராண்டுக்கு மறுநியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நேற்று நடைப்பெற்ற வாரியக் கூட்டத்தில் அம்முடிவுகள் எடுக்கப்பட்டன.
வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் துறைகளுக்கான பினாங்கு ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ எஸ். சுந்தரராஜூவுக்கு, மாநில அரசு சார்பாக அறப்பணி வாரியம் தொடர்பான விவகாரங்களை ஒருங்கிணைக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அறப்பணி வாரியத்தின் அடுத்த ஓராண்டுக்கான 19 புதிய ஆணையர்களின் நியமனங்களை மாநில முதல்வர் Chow Kon Yeow ஆகஸ்ட் 1 -ஆம் தேதி அறிவித்தார்.
ராயர், லிங்கேஷ்வரன் தவிர்த்து, பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன், பத்து ஊபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் ஆறுமுகம் , பினாங்கு ம.இ.கா தலைவர் தினகரன் ஜெயபாலன் உள்ளிட்டோரும் அவர்களில் அடங்குவர்.
பினாங்கில் உள்ள இந்துக்களின் நலனுக்காக நிலம், கட்டடங்கள் மற்றும் நன்கொடைகளை நிர்வகிக்கும் ஒரு சட்டப்பூர்வ அமைப்பான இந்து அறப்பணி வாரியம், இந்து மாணவர்களுக்கும் பலவேறு நிதி உதவிகளையும் வழங்கி வருகிறது.