
கோலாலம்பூர், அக்டோபர் 17,
சுமார் 17 ஆண்டுகள் நடத்திய போராட்டத்திற்குப்பின் டிங்கில் , தாமான் பெர்மாத்தா அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வசித்து வந்த பிராங் பிசார், மிடிங்கிலி, செட்ஜிலி, காலவே ஆகிய நான்கு தோட்டங்களின் முன்னாள் தொழிளார்களின் சுமார் நானூறு குடும்பங்களுக்கு இம்மாதம் 15ஆம் தேதி புதன்கிழமை வீடுகளுக்கான சாவிகள் நேற்று வழங்கப்பட்டன.
நாட்டின் நிர்வாக கேந்திரமாக விளங்கும் புத்ரா ஜெயாவை அமைப்பதற்காக அப்போது அங்கிருந்த பிராங் பிசார், மிடிங்கிலி, செட்ஜிலி, காலவே ஆகிய நான்கு தோட்டத் தொழிலாளர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு 1999 ஆம் ஆண்டு டிங்கில் பட்டணத்தை ஒட்டியுள்ள தாமான் பெர்மாத்தா எனும் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் குடியமர்த்தப்ட்ட பிறகு பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வந்தனர்.
இதனைத் தொடர்ந்து அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் மக்கள் கூடாரம் அமைத்து போராட்டம் நடத்தியதை தொடர்ந்து சிலாங்கூர் மாநில அரசு டிங்கில் அம்பர் தெனாங் பகுதியில் 30 ஏக்கம் நிலம் ஒதுக்கி தர 2017 ஆம் ஆண்டு மத்திய அரசு தரை வீடுகளை கட்டத் தொடங்கியது. கடந்த ஆண்டு இந்த வீடமைப்பு திட்டம் நிறைவு பெற்று சாவிகள் வழங்கப்பட்ட நிலையில் அவர்கள் கட்டம் கட்டமாக தங்களுக்கான புது வீடுகளில் குடியேறுவார்கள் . திங்கட்கிழமை தீபாவளி கொண்டாடப்படவிருக்கும் இவ்வேளையில் இந்த புதிய வீடுகள் நான்கு முன்னாள் தோட்டத் தொழிலாளர்களுக்கு மறக்க முடியாத பரிசாகவும் அமைந்துள்ளது.
________________