Latestமலேசியா

புகையிலை கும்பலின் RM218 மில்லியன் வங்கிக் கணக்கை எம்.ஏ.சி.சி முடக்கியது

கோலாலம்பூர், ஆகஸ்ட் 20 – புகையிலை , சிகரெட் மற்றும் சுருட்டு கடல்தலில் தொடர்பு இருப்பதாக நம்பப்படும் பல்வேறு நிறுவனங்களில் அதிரடி சோதனை நடத்திய மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC 218 மில்லியன் ரிங்கிட் மதிப்புடைய வங்கிக் கணக்கை முடக்கியுள்ளது. கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும் ஜோகூரைச் சுற்றியுள்ள 14 இடங்களில் நேற்று உள்நாட்டு வருமான வரி வாரியம் , பேங்க் நெகாரா, மற்றும் சுங்கத்துறை இணைந்து MACC சிறப்பு செயல் நடவடிக்கைப் பிரிவு இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.

இந்த கும்பலில் அமலாக்க நிறுவன அதிகாரிகளும் ஈடுபட்டிருப்பதாக நம்பப்படுவதோடு , பணமோசடி நடவடிக்கைகள் மூலம் சம்பந்தப்பட்டவர்களின் சொத்துக்களைக் கண்டுபிடித்து பறிமுதல் செய்வதற்கான முயற்சிகளில் விசாரணை கவனம் செலுத்தும் என்று MACC க்கு நெருக்கமான தகவல்கள் மூலம் தெரியவருகிறது.

இந்தக் கடத்தல் நடவடிக்கையால் 2020 ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டுவரை அரசாங்கத்திற்கு 250 மில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகமான வரி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதற்காக, இந்தச் செயலில் ஈடுபட்டதாக அடையாளம் காணப்பட்ட பல நிறுவனங்களின் இறக்குமதி உரிமங்களையும் உள்நாட்டு வருமான வரி வாரியம் நிறுத்திவைத்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!