
புத்ராஜெயா, ஆகஸ்ட் 26 –தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் டத்தோ ஆரோன் அகோ டாகாங் (YB Datuk Aaron Ago Dagang) மற்றும் பிரதமர் துறை அமைச்சர் ஹன்னா இயோ (YB Hannah Yeoh) ஆகியோர், பிரிசின்ட் 20-ல் அமைந்துள்ள புதிய Prince of Peace Church தேவாலயத்தின் சமூகத்தினரைச் சந்தித்தனர்.
2013ஆம் ஆண்டு முதல், பிரிசின்ட் 20 பகுதியில் முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்களை அமைக்க மத்திய அரசு இடம் ஒதுக்கி வருகிறது. பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்கள் தங்களின் நம்பிக்கைகளை அமைதியாகவும் இணக்கமாகவும் கடைப்பிடிக்க இந்த முயற்சி வழிவகுக்கிறது.
இந்த அணுகுமுறை, பல்வேறு மத சமூகங்களிடையே புரிந்துணர்வு, மரியாதை மற்றும் நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் ‘Harmoni MADANI’ முயற்சியுடனும் ஒத்துப்போகிறது.
பிரிசின்ட் 20 பகுதியில் Prince of Peace Church-ஐத் தவிர, 2023ஆம் ஆண்டு முதல் தம்மதூதா (Dhammaduta) மலேசிய பௌத்த நிலையம் இயங்கி வருகிறது. புத்ராஜெயா குருத்வாரா சாஹிப் (Gurdwara Sahib Putrajaya), தேவி ஸ்ரீ லலிதாம்பிகை ஆலயம் (Dewi Sri Lalithaambigai) மற்றும் Tao San Qing சீனக் கோவில் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதே நேரத்தில் Roman Catholic தேவாலயம் அமைக்கவும் ஒரு இடம் திட்டமிடப்பட்டுள்ளது.



