
புக்கிட் ஜாலில், ஏப்ரல்-10-ஸ்ரீ கெம்பாங்கான், புன்சாக் ஜாலில் (Puncak Jalil) பகுதியில் உள்ள மலைக் காட்டில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
நேற்றிரவு 9 மணிக்கு மேல் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் காடு தீயில் சிக்கியதாக தீயணைப்பு – மீட்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தகவல் கிடைத்தவுடன் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் உடனடியாக சம்பவ இடம் விரைந்தனர்.
பல மணி நேர முயற்சிக்குப் பிறகு, தீயைக் கட்டுப்படுத்தும் பணிகள் நிறைவடைந்தன.
இச்சம்பவத்தில் உயிரிழப்பு அல்லது காயம் எதுவும் பதிவாகவில்லை.
தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
கடந்த மாதமும் அங்கு இதே போல் காட்டுத் தீ ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.



