
ஷா அலாம், ஆக 26 -சிலாங்கூரில் பல இடங்களில் நேற்றிரவு பெய்த புயலுடன் கூடிய கடும் மழையின்போது மரம் விழுந்த இரு வெவ்வேறு சம்பவங்களில் சிறுவன் உட்பட இருவர் காயம் அடைந்தனர். கிள்ளான் Jalan Paip பில் தனது தாயார் ஓட்டிச் சென்ற காரில் மரம் விழுந்ததில் அக்காரில் அமர்ந்திருந்த 9 வயது சிறுவன் தலையில் காயம் அடைந்ததைத் தொடர்ந்து மூன்று தையலுக்கு உள்ளானான். அச்சம்பவத்தில் அவனது தாயார் காயம் அடையவில்லை. இதனிடையே Jalan Kapar – Kuala Selangor ரில் லோரி மீது மரம் விழுந்ததில் 35 வயதுடைய லோரி ஓட்டுநர் சொற்ப காயத்திற்கு உள்ளானார்.