
கோலாலம்பூர், செப்டம்பர் 29 –
நேற்று அதிகாலை பூச்சோங் பிளாசா டோல் பத்து 13 பகுதிக்கு அருகே, பெரோடுவா மைவி காரைச் சுற்றி வளைத்து மோட்டார் சைக்கிள் கும்பல் ஒன்று அச்சுறுத்திய சம்பவம் வலைத்தளத்தில் வைரலானதைத் தொடர்ந்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
52 வயதுடைய மைவி ஓட்டுநர், சம்பவத்திற்கு பின்பு உடனடியாக போலீசில் புகார் அளித்துள்ளார் என்று செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் பாரிட் அஹ்மட் தெரிவித்தார்.
இச்சம்பவத்தில் சுமார் 20 மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர் என்றும் அவர்களை அடையாளம் கண்டு கைது செய்யும் நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படுமென்றும் போலீசார் உறுதியளித்தனர்.
இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் மக்கள் தேவையற்ற ஊகக் கருத்துகளை பரப்பாமல் இருக்கவும், சம்பவத்தை நேரில் கண்டவர்கள் போலீசுக்கு தகவல் வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
வைரலாகி வரும் அக்காணொளியில், ஒரு பைக் ஓட்டுநர் காரின் கண்ணாடியை குத்தியதையும் அதனால் ஓட்டுநர் காரின் வேகத்தை குறைத்ததையும் காண முடிந்தது.