
பூச்சோங், நவம்பர்-7, கொலைச் செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வெளிநாட்டுஆடவர் ஒருவர், சிலாங்கூர் பூச்சோங் ஜெயாவில் ஒரு கடைவீட்டு படிகட்டில் நேற்று இறந்துகிடந்தார்.
இரவு 8.30 மணி வாக்கில் பொது மக்களில் ஒருவர் கொடுத்த தகவலின் பேரில் போலீஸ் சம்பவ இடம் விரைந்து சடலத்தை மீட்டது.
விசாரணைக்கு உதவும் பொருட்டு K9 மோப்ப நாய்களும் கொண்டு வரப்பட்டன.
உள்ளூரில் வேலை செய்வதாக நம்பப்படும் அவ்வாடவர் சம்பந்தப்பட்ட கடை வீட்டில் வாடகைக்கு அறை எடுத்து தங்கியிருந்தது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேற்கொண்டு விவரங்களை விரைவிலேயே அறிவிப்பதாக செர்டாங் போலீஸ் கூறியது.



