
அமெரிக்கா ஆகஸ்ட் 12 – கடந்த ஜூன் மாதத்தில் அமெரிக்காவின் அட்லாண்டா நகரிலுள்ள வீட்டு கூரை ஒன்றைத் துளைத்துச் சென்ற தீப்பந்து, பூமியின் வயதை விட 20 மில்லியன் ஆண்டுகள் பழமையான விண்கல் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வெறும் 23 கிராம் எடையிலான இந்த விண்வெளி கல்லை ஆய்வு செய்த போது, அது 4.56 பில்லியன் ஆண்டுகள் பழமையான விண்கல்லிலிருந்து பிரிந்து வந்த விண்வெளி துண்டு என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
மேலும் இந்த விண்கல் செவ்வாய் மற்றும் வியாழன் கிரகங்களுக்கு இடையிலுள்ள சிறுகோள் வளையத்திலிருந்து வந்ததாகவும், சுமார் 470 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட மிகப்பெரிய மோதலின் விளைவாக உருவானதாகவும் கூறப்பட்டுள்ளது.
சம்பவத்தின் போது விழுந்த இந்த தீப்பந்து, வட மற்றும் தென் கரோலினா வரை தென்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.