
கோலாலாம்பூர், அக்டோபர்-9,
சீனர்களின் மத்திய இலையுதிர் கால பண்டிகையான மூன் கேக் விழா (Moon Cake Festival) இவ்வாண்டு கோலாலாம்பூர் பெட்டாலிங் ஸ்ட்ரீட்டில் விமரிசையாக நடைபெற்றது.
மலேசிய சீன அசெம்ப்ளி ஹால் (MCAH) ஏற்பாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றிய தொழிலதிபர் டத்தோ ஸ்ரீ கே.கே. சாய், பல்வேறு இனங்கள் ஒன்றிணைந்து நாட்டின் கலாச்சார ஒற்றுமையை மேம்படுத்த வேண்டுமென வலியுறுத்தினார்.
நிகழ்வுக்கு சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சர் டத்தோ ஸ்ரீ தியோங் கிங் சிங் அளித்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்த அவர், “2026 மலேசியாவுக்கு வருகைப் புரியும் ஆண்டு” பிரச்சார இயக்கத்தை வெற்றியடையைச் செய்ய அனைத்துலக ஒத்துழைப்புக்கும் அழைப்பு அழைத்தார்.
“மூன் கேக் விழா திருவிழா குடும்ப ஒற்றுமையையும், சமூக அமைதியையும் பிரதிபலிக்கிறது. மலேசியாவில் இது அனைத்து இனங்களும் ஒன்றாகக் கொண்டாடும் பண்டிகையாகவும் மாறியுள்ளது” என்றார் அவர்.
Reunion Under the Moonlight என்ற கருப்பொருளில் நடைபெற்ற இவ்விழாவில் அமைச்சர் தியோங் கிங் சிங்கின் பிரதிநிதியாக Ross Ting பங்கேற்றார்.
இவ்வேளையில், நாளை தாக்கல் செய்யப்படும் 2026 பட்ஜெட்டில் கல்வி, சுற்றுலா மற்றும் பொருளாதார முன்னேற்றத்தில் சமநிலையை காக்க வேண்டும் என்றும், எல்லா இனக் கல்வி நிறுவனங்களுக்கும் சமமான நிதியுதவி வழங்கப்பட வேண்டும் என்றும் சாய் வலியுறுத்தினார்.