
பெசுட் , பிப் 26- புலாவ் பெர்ஹெந்தியான் பெசாரில் உள்ள தெலுக் கெகேயில் ( Teluk Keke) மேற்பரப்பு டைவிங் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது சீனாவின் சுற்றுலாப் பயணியான ஆடவர் ஒருவர் நீரில் மூழ்கி இறந்தார்.
68 வயதான அந்த ஆடவர் காலை மணி 11.40 அளவில் தனது நண்பர்களுடன் டைவிங்கில் ஈடுபட்டிருந்தபோது திடீரென மயக்கமடைந்ததாகக் கூறப்பட்டது.
உடனடியாக அவசர சிகிச்சைக்காக புலாவ் பெர்ஹெந்தியான் சுகாதார மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டபோதிலும் மரணம் அடைந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டதாக பெசுட் மாவட்ட போலீஸ் தலைவர் Superintendan முகமட் ரோசைமி அப்துல் ரஹிம் தெரிவித்தார்.
இறந்தவரின் உடலில் காயத்திற்கான எந்த அறிகுறிகளும் கண்டறியப்படவில்லை என்பதோடு அவரது மரணத்தில் எவ்வித குற்றவியல் கூறுகளும் இல்லையென தெரியவந்ததாக முகமட் ரோசைமி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டார்.
Chinese, national, dies, during, diving, operation, PerhentianIsland,



