
பினாங்கு, ஜூலை 30 – நாட்டின் பேட்மிண்டன் சகாப்தம் லீ சோங் வேய்க்கு, டத்தோ ஶ்ரீ விருது வழங்கி சிறப்பு செய்யப்பட்டுள்ளது.
பினாங்கு ஆளுநர் துன் ரம்லி ஙா தாலிப் அவர்களின் 84வது பிறந்தநாளை முன்னிட்டு லீ சோங் வேய்க்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
பினாங்கு புக்கிட் மெர்தாஜாமில் பிறந்த வளர்ந்தவரான லீ சொங் வெய் தனது 17 வயதில் தேசிய பேட்மிண்டன் குழுவில் விளையாடத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.