
தெலுக் இந்தான், மார்ச்-25-பேராக், தெலுக் இந்தானில் 3 வயது சிறுமி ஒருவர் குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் சிம்பாங் அம்பாட், பெர்மாத்தாங் பெலாண்டோக் (Permatang Pelandok) பகுதியில் திங்கட்கிழமை நிகழ்ந்தது.
இரவு 7 மணி வாக்கில் அச்சிறுமி வீட்டுக்கு அருகிலிருந்த கழிவுநீர் குளத்தில் மயக்க நிலையில் கண்டுபிடிக்கப்பட்டாள்
பின்னர் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்ட நிலையில், அவள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
சம்பவம் நடந்த போது, குடும்பத்தார் வீட்டு வேலைகளில் ஈடுபட்டிருந்ததாகவும், குழந்தை காணாமல் போனதை பின்னர் தான் கவனித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
தொடக்கக் கட்ட விசாரணையில், குற்ற அம்சங்கள் எதுவும் இல்லை என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
அந்தக் குளத்தில் தடுப்புச் சுவர் உள்ளிட்ட முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததும் கண்டறியப்பட்டுள்ளது.
இத்தகைய விபத்துகளை தவிர்க்க, சிறு குழந்தைகளை எப்போதும் கவனமாக கண்காணிக்க வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் பதுகாவலர்களைப் போலீஸ் அறிவுறுத்தியுள்ளது.



