
கோலாலம்பூர், ஜூலை 10 – கோலாலம்பூர் ஜாலான் இம்பியிலுள்ள
பொழுதுபோக்கு விடுதியில் போலீஸ் மேற்கொண்ட அதிரடி சோனை நடவடிக்கையில் வாடிக்கையாளர் உபசரணையாளர்களாக இருந்த 73 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
கோலாலம்பூர் போலீஸ் தலைமையகத்தின் விபச்சார துடைத்தொழிப்பு, சூதாட்டம் மற்றும் குண்டல் கும்பல் துடைத்தொழிப்பு பிரிவு நள்ளிரவு 12.30 மணியளவில் இந்த சோதனையை மேற்கொண்டது.
இந்த நடவடிக்கையின்போது வாடிக்கையாளர்கள் மற்றும் உபசரணை பணியாளர்கள் என 145 பேர் தடுக்கப்பட்டதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஷ்டி முகமட் இசா தெரிவித்தார்.
வர்த்தக வளாகத்தின் முதல் மாடியில் அமைந்துள்ள அந்த பொழுது போக்கு விடுதியில் வாடிக்கையாளர்களுக்கான உபசரணையாளர்களாக பணியாற்றிய 73 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் 24 முதல் 40 வயதுடைய மூன்று உள்நாட்டுப் பெண்கள், 52 தாய்லாந்து பெண்கள், ஆறு லாவோஸ் பெண்கள், வியட்னாம் ம் மற்றும் இந்தோனேசியாவைச் சேர்ந்த 5 பெண்களுடன், சீனாவைச் சேர்ந்த இரண்டு பெண்களும் அடங்குவர்.
68 வெளிநாட்டுப் பெண்கள் சட்டப்பூர்வ பயண ஆவணங்களை கொண்டிருந்தாலும் அவர்கள் சுற்றுலா விசாவை தவறாக பயன்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளது.
அந்த உல்லாச விடுதியின் பராமரிப்பாளர் என ஒப்புக்கொண்ட 49 வயது உள்நாட்டுப் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டதாக இன்று வெளியிட்ட அறிக்கையில் ருஸ்டி தெரிவித்தார்.