
கோத்தா பாரு, ஜூலை-19- போலி கடப்பிதழைப் பயன்படுத்திய எகிப்து நாட்டு ஆடவன் கிளந்தான் குடிநுழைவுத் துறையால் கைதுச் செய்யப்பட்டான்.
28 வயது அந்நபர், கோத்தா பாருவில் உள்ள மாநிலக் குடிநுழைவு அலுவலகத்தில் விசா மற்றும் பெர்மிட் முகப்பிடத்தில் சிக்கினான்.
நீண்ட கால பயண அனுமதி அட்டையை நீட்டிக்க முகப்பிடம் வந்தபோது, அனுமதிக்கப்பட்டதை விட ஈராண்டுகள் அதிகமாகவே அவன் மலேசியாவில் தங்கியுள்ளது அம்பலமானது.
பின்னர் புதியக் கடப்பிதழை அவன் அதிகாரிகளிடம் வழங்கினான்.
ஆனால், அதிலிருந்த எண்களும் பழையக் கடப்பிதழ் எண்களும் ஒரே மாதிரியாக இருந்தன; அது போலியாகத் தயாரிக்கப்பட்ட எகிப்தியக் கடப்பிதழ் என தெரியவந்தது.
இதையடுத்து, 1966 கடப்பிதழ் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட ஏதுவாக, தானா மேரா குடிநுழைவுத் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டான்.