ஷா ஆலாம், செப்டம்பர்-28, போலீசாக ஆள்மாறாட்டம் செய்து ஒரு வியாபாரியான வங்காளதேச நாட்டவரைக் கொள்ளையிட்ட உள்ளூர் ஆடவர்கள் 7 பேர் கைதாகியுள்ளனர்.
ஷா ஆலாம் செக்க்ஷன் 25-ல் உள்ள அடுக்குமாடி வீட்டில் கடந்த வாரம் அச்சம்பவம் நிகழ்ந்தது.
அவர்களில் Wira Tempang கும்பலின் தலைவன் உட்பட 39 முதல் 54 வயது வரையிலான ஐந்து ஆடவர்கள் ஷா ஆலாம் சுற்று வட்டாரங்களில் கைதாகினர்.
மேலுமிருவர் கிள்ளான் துறைமுகத்தில் நேற்று கைதுச் செய்யப்பட்டனர்.
செப்டம்பர் 19-ஆம் தேதி இரவு அந்த அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் தனியாக இருந்த போது அந்த வங்காளதேசியை நெருங்கிய எழுவர் கும்பல், அவரை அடித்துப் போட்டு விட்டு 7,000 ரிங்கிட் ரொக்கப் பணத்தையும், 2 கைப்பேசிகளையும் பறித்துச் சென்றது.
விசாரித்ததில் அந்த 7 பேருமே போலீஸ்காரர்கள் இல்லையென்பது உறுதியானதாக, ஷா ஆலாம் போலீஸ் தலைவர் Mohd Iqbal Ibrahim தெரிவித்தார்.