Latestஉலகம்

மதுபானக் கடை குளியலறையில் குடிபோதையில் மயங்கிய Raccoon பூனை; குலுங்கி குலுங்கி சிரித்த வனத்துறை அதிகாரிகள்

அமெரிக்கா, டிசம்பர் 5 – அமெரிக்காவில் மதுபானக் கடை ஒன்றில், மதுவை அருந்தி விட்டு குடிபோதையால் மயங்கி விழுந்த Raccoon வகை பூனையின் நகைச்சுவை செயல் வலைத்தளத்தில் வைரலாகி அனைவரையும் சிரிக்க வைத்து வருகின்றது.

முதலில் அக்கடை ஊழியர்கள் குளியலறையில் மயங்கி விழுந்த Raccoon-ஐ கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஆனால் “முகமூடி அணிந்த கொள்ளைக்காரன்” போல இருந்த அந்த பூனை கடைக்குள் நுழைந்து, வகை வகையான மதுபானங்களை அருந்தி போதைக்குள்ளானது.

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனவிலங்கு அதிகாரிகள் Raccoon-னின் நிலையைக் கண்டு உண்மையிலேயே சிரித்து விட்டனர். அவர்கள் மிகுந்த போதையிலிருந்த பூனையை முதலில் தங்குமிடத்திற்கு அழைத்து சென்றனர். பின்பு சில மணி நேர ஓய்வுக்குப் பிறகு, அதனை மீண்டும் பாதுகாப்பாக காட்டில் விடுவித்தனர்.

இந்நிலையில் வனவிலங்கு துறையினர் குடிபோதையிலிருந்த Raccoon-இன் புகைப்படத்துடன் “இவ்வாறு உள்ளே நுழைவது சரியான தீர்வு அல்ல என்பதை இப்போது கற்றிருக்கிறாய்” என்ற வாசகத்தையும் எழுதி பதிவிட்டிருந்தது வலைத்தளங்களில் பெரும் சிரிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!