
வாஷிங்டன், ஜூன்-18-மத்தியக் கிழக்கில் நீடித்து வந்த போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் ஈரான் உடனான வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தத்தில் அதிகாரப்பூர்வமாகக் கையெழுத்திட்டுள்ளார்.
பிரான்ஸின் வெர்சாய்ஸ் அரண்மனையில் (Palace of Versailles), பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மெக்ரோன் உடனான இரவு விருந்தின் போது இந்தத் திடீர் கையெழுத்து நடவடிக்கை நிகழ்ந்ததாக அமெரிக்க மற்றும் ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
‘இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தம்’ என அழைக்கப்படும் இந்த உடன்படிக்கையில் இரு நாட்டு அதிபர்களும் கையெழுத்திட்டுள்ளதை ஈரானிய வெளியுறவு அமைச்சும் உறுதிச் செய்துள்ளது.
இனி உடன்படிக்கை அமுலாக்கம் காண்பது முக்கியம் என தெஹ்ரான் கூறிற்று.
முதலில் சுவிட்சர்லாந்தில் வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த அதிகாரப்பூர்வ கையெழுத்து நிகழ்வுக்கு முன்னதாகவே இந்த அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் திட்டமிட்டபடி ஜெனிவா சந்திப்பு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், கடந்த பிப்ரவரி 28 முதல் சுமார் 110 நாட்களாக நீடித்து வந்த அமெரிக்க-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் முடிவுக்கு வருகிறது.
தற்போது ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ள நிலையில், இறுதி உடன்படிக்கையை எட்டுவதற்கு இரு நாடுகளுக்கும் 60 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.



