Latestஉலகம்

மனிதகுலம் அழியுமா? முன்னேற்பாடாக 5D நினைவக படிகத்தில் சேமித்து வைக்கப்பட்ட முழு மனித மரபணுக்கள்

லண்டன், செப்டம்பர் -22, பல்லாயிரம் ஆண்டுகளுக்குத் தாக்குப் பிடிக்கும் வகையில், முழு மனித மரபணுவை 5D நினைவுப் படிகத்தில் (memory crystal) பிரிட்டன் விஞ்ஞானிகள் பாதுகாத்து வைத்துள்ளனர்.

இது எதிர்காலத்தில் மனிதகுலத்தை அழிவிலிருந்து மீட்டெடுக்கும் வரைபடத்தை (blueprint) வழங்கும் என்று அவர்கள் நம்புகின்றனர்.

சவுத்தாம்ப்டன் (Southampton) பல்கலைக்கழகத்தின் Optoelectronics ஆராய்ச்சி மையத்தின் (ORC) குழு, மில்லியன் கணக்கான ஆண்டுகள் நீடிக்கும் அத்தரவு சேமிப்பு வடிவத்தால், ஆபத்தான தாவரங்கள் மற்றும் விலங்குகளின் மரபணுக்களையும் காப்பாற்ற முடியும் என கூறுகிறது.

மற்ற தரவு சேமிப்புகள் காலப்போக்கில் சிதைவடைந்து விடும்;

ஆனால் இந்த 5D நினைவக படிகங்களால் 360 terabytes தகவல்களை அதிக வெப்பநிலையில் கூட பில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு இழப்பின்றி சேமிக்க முடியும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இந்த 5D நினைவகப் படிகமானது, 2014 ஆம் ஆண்டில் மிகவும் நீடித்த தரவு சேமிப்புப் பொருளுக்கான கின்னஸ் உலக சாதனையைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!