மலாக்கா, அக்டோபர்-8, உணவு வளங்கள் தீர்ந்ததால் பெரும் பசியிலிருந்ததாக நம்பப்படும் ஒரு முதலை, மலாக்கா ஆற்றில் உடும்பை வேட்டியாடிய வீடியோ வைரலாகியுள்ளது.
இன்று காலை 9 மணிக்கு அச்சம்பவம் நிகழ்ந்த போது, அங்கு வந்திருந்த பொது மக்களும் குடியிருப்பாளர்களும் அக்காட்சியைக் கண்டு அதிர்ந்துபோயினர்.
Kampung Morten அருகேயுள்ள பாதசாரி நடைபாதையிலிருந்து எடுக்கப்பட்ட 1 நிமிட வீடியோ வைரலாகியுள்ளது.
அதில் 3 மீட்டர் நீளமுள்ள முதலை ஆக்ரோஷமாக உடும்பை தாக்குவது தெரிகிறது.
முதலையின் நடமாட்டம் குறித்து கவலைத் தெரிவித்த கிராம மக்கள், உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை வலியுறுத்தினர்.
இன்று உடும்பு இரையானது; நாளை மனிதவர்கள் இரையாக மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் என சிலர் கேள்வி எழுப்பினர்.
இவ்வேளையில், செய்தி கேள்விப்பட்ட வனவிலங்கு மற்றும் தேசியப் பூங்காங்கள் துறையான PERHILITAN, அங்கு கண்காணிப்பை நடத்துவதாகக் கூறியுள்ளது.