
ஜாசின், ஜனவரி-15-இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட 227 கிலோ எடையுடைய விமான குண்டு, மலாக்கா ஜாசினில் நேற்று கட்டுமான இடத்தில் மண் தோண்டும்போது கண்டுபிடிக்கப்பட்டது.
பிற்பகல் 3 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த குண்டு, 1.14 மீட்டர் நீளமும், 27 முதல் 36 சென்டி மீட்டர் சுற்றளவும் கொண்டது.
வெளிப்புறம் பழுதடைந்திருந்தாலும், அது இன்னும் செயல்படும் நிலையில் இருப்பதை போலீஸார் உறுதிப்படுத்தினர்.
உடனடியாக அங்கு பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டு, வெடிகுண்டு ஒழிப்பு நிபுணர்கள் சம்பவ இடம் வரவழைக்கப்பட்டனர்.
கடுமையான பாதுகாப்பு நடைமுறைகளுடன், இந்த குண்டு கட்டுப்படுத்தப்பட்ட வெடிப்பு முறையின் மூலம் நேற்று அழிக்கப்பட்டது.



