Latestமலேசியா

மலாக்காவில் பயங்கரம்; கைப்பேசி தகராறில் நண்பன் குத்திக் கொலை

மலாக்கா, மார்ச்-12-மலாக்கா, சுங்கை ஊடாங்கில் கைப்பேசி தொடர்பான தகராறில் 25 வயது இளைஞர் உயிரிழந்தார்.

நேற்றிரவு 8.30 மணியளவில், 44 வயது நண்பர், பாராங்கத்தியால் 3 முறை அவ்விளைஞரின் நெஞ்சில் குத்தினார்.

கடந்த வாரம் இரவலாகக் கொடுத்த கைப்பேசியை சந்தேக நபர் திரும்பக் கேட்டபோது, வாக்குவாதம் முற்றி கடைசியில் கொலையில் முடிந்தது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சம்பவத்திற்குப் பிறகு தப்பிச் செல்ல முயன்ற சந்தேக நபரை, கொலையுண்ட ஆடவரின் அண்ணன் மற்றும் பொது மக்கள் சுமார் 300 மீட்டர் துரத்தி பிடித்தனர்.

பொது மக்களின் காரொன்றில் புகுந்து ஒளிந்துகொள்ள முயன்றபோது அவர் சிக்கினார்.

இருவருக்கும் முன்பே குற்றச்செயல் மற்றும் போதைப்பொருள் குற்றப்பதிவுகள் இருப்பதை போலீஸ் உறுதிப்படுத்தியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!