Latestமலேசியா

மலாயாப் புலி நீந்தும் ஒய்யாரக் காட்சி; வைரல் வீடியோவால் வலைத்தளவாசிகள் மகிழ்ச்சி

ஈப்போ, நவம்பர்-10,

பேராக்கில் உள்ள Royal Belum மாநில பூங்காவில் ஒரு மலாயா புலி ஏரியில் நீந்தும் ஒய்யாரக் காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

பூங்கா நிர்வாகம் பகிர்ந்த அந்த வீடியோவில், புலி நீரில் மெதுவாக நீந்திச் செல்வதும், அருகே படகில் சென்ற வனக்காவலர்கள் இந்த அபூர்வக் காட்சியை பார்த்து மகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்பதும் தெரிகிறது.

வலைத்தளவாசிகளும் அம்மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ளும் வகையில் “புலிக்கும் படகில் ஒரு லிப்ட் கொடுத்திருக்கலாமே!” என நகைச்சுவையுடன் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த Royal Belum பூங்கா, மலாயா புலிகள் உள்ளிட்ட அழிந்து வரும் ஆபத்தில் உள்ள விலங்குகளின் சரணாலயமாகும்.

வெறும் புலி தானே என்றில்லாமால், இந்த வீடியோ, இயற்கையையும் வனவிலங்குகளையும் பாதுகாக்கும் அவசியத்தை நமக்கு மீண்டும் நினைவூட்டுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!