
கோலாலம்பூர், ஜூன்-28 – MEF எனப்படும் மலேசியப் பொருளாதார மன்றத்தின் 2025 சிறப்பு மாநாட்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களித்த முக்கிய நபர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது.
அவ்வகையில், ஆசியாவின் வர்த்தகத் துறையில் தன்னிகரற்ற பங்களிப்புக்காக, Tasly Marketing (Malaysia) Sdn Bhd நிறுவன இயக்குநரான டத்தோ Dr ரவி பக்கிரிசாமி Asia Business Icon Lifetime Achievement Award விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
டத்தோ Dr ரவி, மலேசியாவில் இந்திய சமூகத்தின் வர்த்தக முன்னேற்றத்திற்கு அடித்தளம் அமைத்தவர் ஆவார்.
அவரின் இந்த வெற்றி, இனவொன்றுபட்ட சமூகத்திற்கான ஊக்கமாக இருக்கும் என விழாவில் வலியுறுத்தப்பட்டது.
நெகிரி செம்பிலான் மாநில துங்கு லக்சமனாவும் முன்னாள் இடைக்கால சமஸ்தானாதிபதியுமான துங்கு டத்தோ ஸ்ரீ உத்தாமா நக்குயுடின் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, விருதுகளை எடுத்து வழங்கினார்.
கோலாலம்பூர் பொருளாதார கிளப்பின் தலைவர் டத்தோ ஸ்ரீ மொஹமட் இக்பால் ராவுத்தரும் உடனிருந்தார்.
இந்நிகழ்வில், அரசாங்கம், வணிகம் மற்றும் கல்வித் துறைகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட முக்கியப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
கோலாலம்பூர், பெர்ஜாயா டைம்ஸ் ஸ்குவேர் ஹோட்டலில் “Navigating the Future: Pioneering Economic Resilience and Green Prosperity” என்ற கருப்பொருளில் இம்மாநாடு நடைபெற்றது.
இதனை KSI Strategic Institute for Asia Pacific மற்றும் Economic Club of Kuala Lumpur (ECKL) ஆகியவை இணைந்து நடத்தின.
மாநாட்டில் உலகளாவிய பொருளாதார மாற்றங்களின் சூழலில் மலேசியாவின் நிலைத்தன்மை மற்றும் பசுமை வளத்தை மேம்படுத்தும் திட்டங்கள் குறித்தும், எதிர்கால வளர்ச்சி பாதைகள் குறித்தும் தீவிரமான விவாதங்கள் நடைபெற்றன