Latestமலேசியா

முன்னுரிமை மாறுவதால் திருமணத்தைத் தவிருக்கும் மலேசிய இளையோர்

கோலாலம்பூர், டிசம்பர்-6, முன்னுரிமைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாகவே, பெரும்பாலான இளம் தலைமுறையினர் திருமணம் செய்து கொள்ள வேண்டாமென முடிவெடுக்கின்றனர்.

மலேசிய அறிவியல் பல்கலைக் கழகத்தின் மக்கள் தொகை நிபுணர் நிக் நோர்லியாத்தி ஃபித்ரி மொஹமட் நோர் ( Nik Norliati Fitri Md Nor) அவ்வாறு கூறியுள்ளார்.

குறைந்து வரும் திருமண விகிதத்தின் போக்கு, மலேசியர்களிடையே மாறி வரும் தேவைகளையும் சமூகத்தின் வழக்கத்தையும் தெளிவாகப் பிரதிபலிப்பதாக அவர் சொன்னார்.

தனிப்பட்ட சுதந்திரத்திற்கு மதிப்பளித்து, முக்கியக் கடமைகள் இன்றி கட்டுப்பாடுகள் இல்லாத சீரான வாழ்க்கைக்கு முன்னுரிமை அளிப்பதால், பலர் திருமணம் செய்ய வேண்டாம் என நினைப்பதாக, நிக் நோர்லியாத்தி FMT-யிடம் கூறினார்.

திருமணச் செலவு, வீடு வாங்குதல், திருமணத்திற்குப் பிந்தைய வாழ்க்கைச் செலவின அதிகரிப்பு போன்ற அம்சங்கள் இளம் தலைமுறையினர் மத்தியில் பெரும் அழுத்தங்களாகப் பார்க்கப்படுகின்றன.

அதோடு விவாகரத்து பயமும் அவர்களை ஆட்கொண்டுள்ளது; குறிப்பாக இளம் பருவத்திலேயே பெற்றோர் விவாகரத்துப் பெற்றத்தைப் பார்த்து வளர்ந்தவர்கள் திருமணத்தைப் பற்றி யோசிக்கவே மறுக்கின்றனர்.

இதனால் திருமணம், மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கைக்கு உத்தரவாதம் இல்லையென்ற முடிவுக்கு அவர்கள் வந்து விடுகின்றனர்.

ஆனால், இப்படியே போனால் நாட்டில் பிறப்பு விகிதம் குறைந்து, மலேசியா சீக்கிரத்திலேயே வயதான நாடாகி விடுமென நிக் நோர்லியாத்தி எச்சரிக்கிறார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!