Latestஇந்தியாஉலகம்

மும்பையில் சுற்றுப்பயணிகளின் ஃபெரி படகை கடற்படையின் அதிவேக படகு மோதியதில் 13 பேர் பலி

மும்பை, டிசம்பர்-19, இந்தியா, மும்பையில் சுற்றுப்பயணிகள் சென்ற ஃபெரி படகை, கடற்படையின் speedboat எனப்படும் அதிவேக படகு மோதியதில் 13 பேர் பலியாயினர்.

அவர்களில் 10 பேர் சுற்றுப் பயணிகள், மூவர் கடற்படை வீரர்கள்.

மேலும் 101 பேர் காப்பாற்றப்பட்டனர்.

மும்பையின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான Gate of India-விலிருந்து, அரபிக்கடலுக்கு நடுவே உள்ள எலிபென்டா (Elephanta) தீவுக்குச் செல்லும் வழியில், அத்துயரச் சம்பவம் நிகழ்ந்தது.

பிரசித்திப் பெற்ற ஏழாம் நுாற்றாண்டு குகை கோவில் இருப்பதால், அதைப் பார்ப்பதற்காக எலிபென்டா தீவுக்கு தினசரி நூற்றுக்கணக்கானோர் ஃபெரி போக்குவரத்து சேவையைப் பயன்படுதுகின்றனர்.

இந்நிலையில் நேற்று நுாற்றுக்கும் மேற்பட்டவர்களை ஏற்றிச் சென்ற ‘நீல்கமல்’ என்ற ஃபெரியை, அதிவேகமாக வந்த கடற்படை படகு திடீரென மோதியது.

இதனால் ‘நீல்கமல்’ படகிலிருந்த பலர் கடலுக்குள் விழுந்தனர்;
மோசமான சேதத்தால் ஃபெரி கடலுக்குள் மூழ்கத் தொடங்கியது.

14 படகுகள் மற்றும் 4 ஹெலிகாப்டர்கள் துணையுடன் மீட்புப்பணி மேற்கொள்ளப்பட்டது.

சுற்றுப்பயணிகள் பலரும் தண்ணீரில் மூழ்காமல் இருப்பதற்கான பாதுகாப்பு ஜேக்கேட்டை அணிந்திருந்ததால், அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

அவ்விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என மஹாராஷ்ட்ரா மாநில அரசு கூறியுள்ளது.

படகு மோதுவதை, பயணிகள் படகிலிருந்த ஒருவர் கைப்பேசியில் பதிவுச் செய்த வீடியோ வைரலாகியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!