மும்பையில் பெண்ணை நிர்வாணமாக்கிய அதிர்ச்சி சம்பவம்; ஐவர் கைது

மும்பை, டிசம்பர் 2 – மும்பையில் பெண் தொழிலதிபர் ஒருவரை, துப்பாக்கி காட்டி மிரட்டி, அவரை நிர்வாணமாக்கி அவமானப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பந்தப்பட்ட அந்த ஆடவன் இச்சம்பவத்தை பற்றி வெளியே சொன்னால் அப்பெண்மணியின் நிர்வாண புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிடுவேன் என்று மிரட்டியுள்ளான்.
மிரட்டல்களைக் கடந்து அப்பெண் துணிவாக மும்பை காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
போலீசார், பிரதான குற்றவாளி உட்பட ஐந்து பேரைக் கைது செய்து பாலியல் தொந்தரவு, தாக்குதல் மற்றும் மிரட்டல் தொடர்பான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
முன்னதாக, கல்கத்தாவில் நவம்பர் 29 ஆம் தேதியன்று, வாடகை காருக்காக காத்திருந்த பெண்மணியை கும்பல் ஒன்று வலுக்கட்டாயமாக காருக்குள் இழுத்து அவரை மது குடிக்க வைத்து பின்னர் பாலியல் தொந்தரவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



