
கோலாலம்பூர், ஏப்ரல்-10-கோலாலம்பூர், ஜாலான் முன்ஷி அப்துல்லாவில் தேவி ஸ்ரீ பத்ர காளியம்மன் கோவிலின் புதிய கட்டுமானத்திற்கான ‘மூலஸ்தான பூஜை’ நேற்று காலை சிறப்பாக நடைபெற்றது.
இந்த அடிக்கல் நாட்டு விழாவில், இலக்கவியல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
கோவில் கட்டுமானப் பணிகள் சிறப்பாகவும் சீராகவும் நடைபெற வேண்டும் என கோபிந்த் நம்பிக்கை தெரிவித்தார்.
அதற்கு, தனது முழு ஆதரவும் தொடரும் என்றும் அவர் கூறினார்.
முன்னதாக ஜேக்கல் நிறுவனத்துடன் நிலப் பிரச்னையில் சிக்கிய இக்கோயில், அரசாங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்புகளின் நல்லிணக்க முயற்சியில் 50 மீட்டர் தள்ளி இட மாற்றம் காண்கிறது.
எல்லாம் சுமூகமடைந்து ஒருழியாகக் கட்டுமானமும் தொடங்குவதால், இந்தக் கோவில், வழிபாட்டு மையமாக மட்டுமல்லாமல், உள்ளூர் இந்திய சமூகத்திற்கு ஒரு உறுதியான சமூக மையமாகவும் விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



