Latestஉலகம்

மெக்ஸிகோவிலும் அமெரிக்காவிலும் பரபரப்பு; போதைப் பொருள் கடத்தல் தலைவர் சுட்டுக்கொலை

மெக்ஸிகோ, பிப்ரவரி 23 – நாட்டின் பெரிய போதைப்பொருள் கடத்தல் அமைப்பான ஜாலிஸ்கோ நியூ ஜெனரேஷன் கார்டெலின் (Jalisco New Generation Cartel) தலைவர் எல் மேஞ்சோ (El Mencho) மெக்ஸிகோ இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதனால் சில பகுதிகளில் வாகனங்கள் எரிப்பு, சாலைகள் மறைப்பு போன்ற வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

El Mencho மெக்ஸிகோவிலும் அமெரிக்காவிலும் போலீசாரால் வலை வீசி தேடப்படும் குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக அமெரிக்க அரசு El Mencho-ஐ கண்டுபிடிப்பவர்களுக்கு 15 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசுத்தொகையை அறிவித்திருந்தது.

இந்த கார்டெல் அமைப்பானது 2009-ல் உருவாக்கப்பட்டு, கொக்கேன் (Cocaine), ஹெரோயின் (Heroin), மெத்தாம்பெட்டமின் (Methamphetamine), ஃபென்டானில் (Fentanyl) போன்ற போதைப்பொருட்களை அமெரிக்க எல்லைக்குச் சென்றடையச் செய்யும் ஒரு அமைப்பாகும். அமெரிக்கா இதனை பிரளய அமைப்பாகவும், அச்சுறுத்தலாகவும் வகைப்படுத்தியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!