
ஜோகூர், மெர்சிங்கில் யானைக் குட்டி மோதியதில் காரொன்று பள்ளத்தில் விழுந்து ஓட்டுனர் காயமடைந்தார். அச்சம்பவம் குறித்து இன்று அதிகாலை 2.28 மணியளவில் அவசர அழைப்பு கிடைத்ததாக தீயணைப்பு நிலையத்தின் நடவடிக்கைப் பிரிவு கமாண்டர் Azlan Hamzah தெரிவித்தார்.
அதனை அடுத்து மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் Perodua Bezza காருக்குள் சிக்கியிருந்த அந்த 31 வயதான உள்நாட்டு ஓட்டுனர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.
காலில் காயமடைந்த அவர், சிகிச்சைக்காக மெர்சிங் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக Azlan கூறினார். இதனிடையே அச்சம்பவம் தொடர்பில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகவும் மேல் விசாரணை மேற்கொள்ள பணியாளர்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் ஜோகூர் தேசிய வனவிலங்குத் துறை தெரிவித்துள்ளது.



