
ஈப்போ, ஜூலை 2 -அண்மையில் வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் கிலோமீட்டர் 265 இல் மோட்டார் குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து போலீசார் முழு விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர் என்று பேராக் காவல்துறைத் தலைவர் டத்தோ நூர் ஹிசாம் நோர்டின் தெரிவித்துள்ளார்.
பிளஸ் நெடுஞ்சாலை ஊழியர்களால் அடையாளம் காணப்பட்ட அக்குண்டு, அங்கு எப்படி வந்திருக்க முடியுமென்றும், அது இரண்டாம் உலகப் போரின் நினைவுச்சின்னமா இல்லையா என்பதை போலீசார் விசாரித்து வருவதாக அவர் மேலும் கூறியுள்ளார்
இந்நிலையில் இந்த குண்டு வெடிக்க இயலாத ஒரு மோட்டார் வெடிபொருள் என்று காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
குண்டு வெடிப்பு சாலை பயனர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும் சந்தேகத்திற்கிடமான அறிமுகமில்லாத பொருட்களைப் பார்க்கும் பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினரிடம் புகாரளிக்க வேண்டுமென்றும் நூர் ஹிஷாம் அறிவுறுத்தியுள்ளார்.