யானைகள் மீதமர்ந்து, மணமக்கள் திருமண ஊர்வலம்: சட்டங்கள், SOP-களை மறுஆய்வு செய்ய சிறப்பு பணிக்குழு – பெரிஹிலித்தான்

கிளாந்தான், ஜூலை 1 – கிளாந்தானில் நடைபெற்ற திருமண ஊர்வலத்தில் மணமக்கள் யானையில் பயணித்தது சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, மலேசிய வனவிலங்கு மற்றும் தேசிய பூங்கா துறையான Perhilitan, சட்டங்கள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை (SOP) மறுஆய்வு செய்ய சிறப்பு பணிக்குழுவை அமைப்பதாக அறிவித்துள்ளது.
ஆசிய யானைகள் பாதுகாக்கப்படும் அரிய உயிரினங்கள் என்பதால், திருமணம் போன்ற நிகழ்வுகளில் அவற்றைப் பயன்படுத்தியதற்கு விலங்கு நல அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி, தேவையான அனுமதிகள் பெறப்பட்டனவா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும் என அவை வலியுறுத்தியுள்ளன.
மேலும் பெர்ஹிலித்தான், யானைகள் பயன்படுத்தப்பட்ட நிகழ்வு அனுமதி பெற்ற மடானி சமூக நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இருந்ததாகவும், யானைகளின் நலன் SOP-க்கு ஏற்ப கண்காணிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.



