
தம்பின், நவம்பர்-23 – கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (MCO) பிறப்பிக்கப்பட்டதிலிருந்து, தனது கடையில் விட்டுச் சென்ற 200 ஜோடி காலணிகளைத் திரும்பப் பெறுமாறு, ஆடவர் ஒருவர் தனது வாடிக்கையாளர்களிடம் கெஞ்சுகிறார்.
ஆண்டுக்கணக்கில் அவை அங்கேயே கிடப்பதால், நெகிரி செம்பிலான் தம்பினில் உள்ள தனது சிறியக் கடையின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
அதோடு, ஒரு ஜோடி காலணிக்கு RM20 என்ற கூலியும் தமக்குக் கிடைக்கவில்லை என 52 வயது Zulkifli Rashid விரக்தியுடன் தெரிவித்தார்.
தனது கடையில் பழுதுபார்ப்பதற்காக விட்டுச் சென்ற காலணிகளை வாடிக்கையாளர்கள் இன்னமும் நினைவில் வைத்திருப்பார்கள் என நம்புவதாகக் குறிப்பிட்ட Zulkifli, அவற்றை அவர்கள் வந்து எடுத்துச் செல்ல வேண்டுமென ஒவ்வொரு நாளும் தான் பிராத்திப்பதாகவும் சொன்னார்.
30 ஆண்டுகளுக்கு முன்பு வாடகைக்கு எடுத்த சிறிய கடை காலணிகளால் கிட்டத்தட்ட நிரம்பி விட்டதால், அதை சமாளிப்பது அவருக்கு கடினமாகிவிட்டது.
அந்த 200 பேரில் நீங்களும் ஒருவராக இருந்தால் தயவுகூர்ந்து உங்கள் காலணிகளை திரும்பப் பெற்றுச் செல்லுங்கள்…..



