Latestமலேசியா

ரவுப் செல்கோம்டீஜி கோபுரத்தில் நாசவேலை 8 இடங்களில் சேவைகள் பாதிப்பு

குவந்தான், ஜூலை 3 – ரவுப், Dong கில் செல்காம்டிஜிக்கு ( CelcomDigi) சொந்தமான தொலைத்தொடர்பு கோபுரம், நாசவேலை காரணமாக சேதமடைந்ததாகவும், சுற்றியுள்ள பகுதிகளில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

MCMC எனப்படும் மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்தின் முதற்கட்ட விசாரணைகளில், கோபுரம் மற்ற எட்டு பரிமாற்ற கோபுரங்களை இணைக்கும் ‘சேகரிப்பாளராக’ செயல்பட்டதாக பகாங் ஆட்சிக்குழு உறுப்பினர் பஸ்லி முகமட் கமால் (Fadzli Mohamad Kamal) தெரிவித்தார். Kampung Gesing, Sungai Ruan, Kampung Jelu, Bukit Pampong, Kampung Chendra Chinchin, Kampung Tanjung Putus, Kampung Temau மற்றும் Kampung Gali Hilir ஆகிய இடங்களில் உள்ள கோபுரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த நாசஇந்த நாசவேலைச் செயலால், பல உபரி பாகங்கள் சேதமடைந்து, செயல்படவில்லை என்பதால் கையிருப்பில் உபரி பாகங்கள் கிடைத்தால் மட்டுமே அவற்றை மாற்றியமைக்க முடியும் என கூறப்பட்டது. பாதிக்கப்பட்ட கோபுரங்களை கட்டம் கட்டமாக மீண்டும் செயல்படுத்தும் தற்காலிக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக Fadzli தனது முகநூலில் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க, தொலைத்தொடர்பு கோபுரங்களுக்கு அருகில் ஏதேனும் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் இருந்தால் உடனடியாகத் தகவல் தெரிவிப்பதோடு , அதிகாரிகளுடன் ஒத்துழைக்குமாறு பொதுமக்களை அவர் கேட்டுக்கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!