
ராஜஸ்தானில் திருமண மேடையில் அதிர்ச்சி; 4 லட்சம் ரூபாய், நகைகள் இருந்த மணமகளின் பையை இலாவகமாகத் தூக்கிச் சென்ற திருடன்
ஜெய்ப்பூர், பிப்ரவரி-14,
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத் தலைநகர் ஜெய்ப்பூரில் திருமண விழாவொன்றில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம் CCTV-யில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அம்சமாக உடையணிந்து விருந்தினர் போல மண்டபத்திற்குள் நுழைந்த திருடன், மேடையில் மணமகளின் கைப்பையை இலாவகமாக எடுத்துச் சென்றான்.
அப்பையில் 4 லட்சம் ரூபாய் பணமும் நகைகளும் இருந்தன.
அதிர்ச்சியடைந்த திருமண வீட்டார் போலீஸில் புகாரளித்துள்ளனர்.
இது அண்மையக் காலமாகவே திருமண விழாக்களை குறிவைக்கும் கொள்ளை கும்பலின் செயல் என ஜெய்ப்பூர் போலீஸ் சந்தேகிக்கின்றது.
குறிப்பாக பணக்கார வீட்டு ஆடம்பரத் திருமணங்களை இக்கும்பல் குறி வைக்கிறது; யாருக்கும் சந்தேகமே வராத வகையில் நேர்த்தியாக உடையணிந்து மண்டபத்திற்குள் நுழைந்து கைவரிசை காட்டுவதே அவர்களில் வேலையாம்.
இதையடுத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
திருமணத்திற்கு வரும் விருந்தினர்களில் திருடர்களை எப்படி கண்டறிவது என ஜெய்ப்பூர் மக்கள் குழம்பிபோயுள்ளனர்.



