
லண்டன், ஜூலை-14 – லண்டனில் உள்ள ஒரு வட்டார விமான நிலையத்தில் சிறிய இர விமானமொன்று, புறப்பட்ட வேகத்திலேயே விழுந்து விபத்துக்குள்ளானது.
எனினும் சம்பவத்தின் போது விமானத்தில் எத்தனைப் பேர் இருந்தார்கள் அவர்களின் நிலை என்ன என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை.
விமானச் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டு விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.
வைரலான வீடியோவில், சுமார் 12 மீட்டர் நீளமுடைய ஒரு விமானம் தீப்பற்றி எரிவதையும் கரும்புகை மேகமாக எழுவதையும் காண முடிந்தது.
சிறிய இரக விமானமென்றாலும் இது “தீவிரமான விபத்து” எனக் குறிப்பிட்ட போலீஸ், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகிலிருந்த கோல்ஃப் கிளப் மற்றும் ரக்பி மைதானத்திலிருந்தவர்களை வெளியேற்றியது.
சம்பவ இடத்தில் விசாரணையும் நடைபெற்று வருகிறது.
லண்டனுக்கு கிழக்கே 65 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த Southend-on-Sea விமான நிலையம், லண்டன் வட்டாரத்தின் 6-ஆவது பெரிய விமான நிலையமாகும்.