
ஜாசின், மார்ச் 17 – இன்று அதிகாலை வடக்கு-தெற்கு விரைவுச்சாலையின் 193.8 ஆவது
கிலோமீட்டரில் ஒரு டிரெய்லர் மோதியதில் பிக்கப் டிரக் தீப்பிடித்து எரிந்ததைத் தொடர்ந்து அதன் ஓட்டுநர் உயிரிழந்தார்.
இன்று அதிகாலை நிகழ்ந்த அந்த துயரச் சம்பவத்தில் சிக்கியவரின் கருகிய உடலை இடிபாடுகளிலிருந்து தீயணைப்பு மீட்புத்துறை பணியாளர்கள் மீட்டனர். அதிகாலை மணி 2.15க்கு அவசர அழைப்பு கிடைத்ததைத் தொடர்ந்து சம்பவம் நடந்த இடத்திற்கு சென்றடைந்தபோது அங்கு ஒரு டிரெய்லர் லோரியும் பிக்கப் டிரக்கும் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்ததை தீயணைப்பு வீரர்கள் கண்டணர் .
அந்த விபத்தில் டிரெய்லர் ஓட்டுநர் பாதுகாப்புடன் உயிர் தப்பினார். பிக்அக் ஓட்டுநரின் கருகிய உடலை இடிபாடுகளிலிருந்து தீயணைப்பு வீரர்கள் மீட்டு மேல் நடவடிக்கைக்காக போலீசிடம் ஒப்படைத்தனர் என மலாக்கா தீயணைப்பு மீட்புத்துறையின் பொது உறவு அதிகாரி முகமட் ஹபிட்ஷத்துலா (Mohd Hafidzatullah ) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.



